Thursday, February 6, 2025

ராஜமவுலியின் படத்தில் மகேஷ் பாபுவுக்கு ப்ரியங்கா சோப்ரா ஜோடி இல்லையா? தீயாய் பரவும் தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மகேஷ் பாபுவின் 29வது திரைப்படத்தை, இயக்குநர் ராஜமெளலி பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். தொடக்கத்தில், மகேஷ் பாபுவின் ஜோடியாக வெளிநாட்டு நடிகைகள் நடிக்கவுள்ளனர் என தகவல்கள் வெளிவந்தன. ஆனால், பின்னர் பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை வெற்றி பெற்ற பிரியங்கா சோப்ராவை இப்படத்திற்கு தேர்வு செய்ததாக புகைப்படங்களுடன் தகவல்கள் கசிந்தன.

டோலிவுட்டில் பிரபாஸ், ராம் சரண், ஜூனியர் என்டிஆர் போன்ற நடிகர்களை பான் இந்தியா ஹீரோவாக மாற்றியுள்ள ராஜமெளலி, இப்போது மகேஷ் பாபுவை பான்-வேர்ல்ட் ஹீரோவாக உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார். இப்படத்திற்காக மகேஷ் பாபு சிக்ஸ் பேக் உடம்பு கட்டமைத்து நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

முதலில், மகேஷ் பாபுவின் ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிக்கிறார் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அவரே வில்லியாக நடிக்கிறார் என்பது திடீர் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்கப் போவது யார்? என்பது பற்றிய கேள்விகள் எழுந்துள்ளன.

- Advertisement -

Read more

Local News