‘காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை காதலர் தினம்’மூன – எம்.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் கவுரி சங்கர் தயாரித்து இயக்கியுள்ள காதல் படம். இதில் சரவணன், அபிநயா அன்பழகன், ஸ்ரீ பவி, ஐஸ்வர்யா பாஸ்கரன், ரமேஷ் கண்ணா, கும்கி அஸ்வின், நடேசன், தெனாலி, அகல்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையை ஆதிஷ் உத்ரியன் அமைத்துள்ளார், ஒளிப்பதிவை து. மகிபாலன் மேற்கொண்டுள்ளார்.
படத்தின் கதூ குறித்து இயக்குநர் கவுரி சங்கர் கூறுகையில், “நாம் இன்றைய காதலை மூன்று வகைப்படுத்தலாம் – புரிந்த காதல், புரியாத காதல், புதிரான காதல். புரிந்த காதல் – மகிழ்வானது, புரியாத காதல் – சுமையானது, புதிரான காதல் – முடிவில்லாதது. இதை ஒவ்வொரு காதலுக்கும் தனித்தனி ஜோடிகளை கொண்டு சொல்லியிருக்கிறேன்,” என தெரிவித்துள்ளார்.
மேலும், “இன்றைய இளைய சமுதாயம் சமூகத்தில் தங்கள் வாழ்க்கையை தொலைக்கிறார்களா, அல்லது அதை தொடர்கிறார்களா?” என்ற கேள்விக்கான விடையை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியிருக்கிறேன், எனக் கூறினார்.