Wednesday, February 5, 2025

அந்த சம்பவம் எனக்கு கடுமையான மனவேதனை… நடிகை தம்மன்னா பகிர்ந்த கசப்பான அனுபவம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘ஜெயிலர்’ படத்தில் ‘காவாலா’ பாடலுக்கு நடனமாடி அசத்திய நடிகை தமன்னா, ஹிந்தியில் வெளியான ‘ஸ்ட்ரீ 2’ படத்தில் ‘ஆஜ் கி ராட்’ பாடலிலும் நடனமாடியிருந்தார். தற்போது, அசோக் தேஜா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஒடேலா 2’ படத்திலும் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய தமன்னா, “நான் ஒரு முறை கேரவனில் இருந்தபோது, மிகவும் மோசமான ஒரு அனுபவத்தை எதிர்கொண்டேன். அந்த சம்பவம் எனக்கு கடுமையான மனவேதனை ஏற்படுத்தியது. என்னுடைய கண்கள் குளமாகிப் போனது. ஆனால், அந்த நேரத்தில் படப்பிடிப்பு காரணமாக மேக்கப் போட்டிருந்தேன், கண்மை (மஸ்காரா) இருந்ததால் அழ முடியவில்லை. அது ஒரு உணர்வுத்தான், அதை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம் என எனக்கு நானே சொன்னேன். இதனால், நான் சோகமான மனநிலையிலிருந்து மகிழ்ச்சியான உணர்வுக்குச் சென்று விட்டேன் என்றார்.

அந்த மோசமான அனுபவம் எந்த படப்பிடிப்பின்போது ஏற்பட்டது என்பதோ, என்ன நடந்தது என்பதோ குறித்து தமன்னா எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

- Advertisement -

Read more

Local News