மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6 அன்று திரைக்கு வரவுள்ளது. இதன் பின்னர், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள Good Bad Ugly திரைப்படம் ஏப்ரல் 10 அன்று வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் அஜித்துடன் அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், மேலும் இசையை ஜி.வி. பிரகாஷ் குமார் அமைத்துள்ளார்.
இந்தப் படத்திற்காக, அஜித் தனது உடல் எடையை குறைத்து, மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும், இதில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தீனா படத்தில் இடம் பெற்ற “வத்திக்குச்சி பத்திக்காதுடா” பாடலை ஜி.வி. பிரகாஷ் ரீமிக்ஸ் செய்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
அதேபோல், மார்க் ஆண்டனி திரைப்படத்திலும் “பஞ்சு மிட்டாய் சேலை கட்டி” என்ற பாடலை ஜி.வி. பிரகாஷ் ரீமிக்ஸ் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.