Friday, January 31, 2025

சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தின் டைட்டிலுக்கு மீண்டும் சிக்கலா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

1952 ஆம் ஆண்டு, நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார் தயாரிப்பில், கிருஷ்ணன் – பஞ்சு இயக்கத்தில், நடிகர் சிவாஜி கணேசன் தனது அறிமுகத்தை செய்த பராசக்தி திரைப்படம் வெளியானது. அப்போது இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.அதே பராசக்தி என்ற பெயரை, இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, மற்றும் ஸ்ரீலீலா நடிக்கும் புதிய படத்திற்காக அறிவித்தனர். இதே தினத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும் சக்தித் திருமகன் என்ற தமிழ் படத்திற்கு, தெலுங்கு மொழியில் பராசக்தி என பெயரிடப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இருவரும் முறையே வெவ்வேறு தயாரிப்பாளர் சங்கங்களில் பதிவு செய்திருந்ததால், விவாதம் தீவிரமானது. ஆனால், பராசக்தி என்ற தலைப்பைப் பயன்படுத்துவதற்கான அனுமதி ஏவிஎம் நிறுவனத்தால் சிவகார்த்திகேயன் படத்திற்கே வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில், விஜய் ஆண்டனி தனது படத்திற்கு பராசக்தி என்ற பெயரை பயன்படுத்துவதை கைவிட்டார்.

இந்நிலையில், 1952 ஆம் ஆண்டு வெளியான பராசக்தி திரைப்படத்தின் தயாரிப்பாளரான பெருமாள் முதலியாரின் பேரன் கார்த்திகேயன், அந்த பழைய வெற்றிப் படத்தை தற்போது டிஜிட்டல் வடிவில் மீண்டும் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார். “இந்தப் படத்தை எங்களது தாத்தா தயாரித்தார். ஏவிஎம் நிறுவனம் சில பகுதிகளில் மட்டுமே வினியோக உரிமையை பெற்றிருந்தது. எனவே, பராசக்தி என்ற தலைப்பை வேறு யாரும் புதிய படங்களுக்கு பயன்படுத்துவதை தவிர்த்திட வேண்டும்” என அவர் கேட்டுக் கொண்டார்.

அவர் அதைப் பயன்படுத்தக் கூடாது என தீர்மானமாகக் கூறவில்லை, ஆனால் தலைப்பைத் தவிர்க்க வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடு. மேலும், ஒரு திரைப்படத்திற்கான உரிமை, இந்திய அரசின் காப்புரிமை (Copyright) சட்டத்தின்படி, அதன் தயாரிப்பாளருக்கு 60 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும். அதன்பிறகு, அந்த படத்தினை யார் வேண்டுமானாலும் தொலைக்காட்சி (TV), யூட்யூப் (YouTube) போன்ற ஊடகங்களில் வெளியிடலாம். எனவே, பராசக்தி திரைப்படம் வெளியாகி 73 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அதன் தலைப்பு மற்றும் உரிமை தயாரிப்பாளர் வசம் இருக்க வாய்ப்பே இல்லை என்றெல்லாம் தகவல்கள் பரவுகிறது.

- Advertisement -

Read more

Local News