Touring Talkies
100% Cinema

Monday, March 10, 2025

Touring Talkies

பழைய தலைப்புகளில் புதிய படங்கள்… தனுஷ் சிவகார்த்திகேயன் செய்துவரும் சம்பவங்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரைப்படங்களில் பழைய படங்களின் தலைப்புகளை மீண்டும் பயன்படுத்துவது தற்போது ஒரு வாடிக்கையாகி விட்டது. “ஏன் புதிய தலைப்புகள் கிடைக்கவில்லையா?” என்று கேட்டால், “இந்த தலைப்பே எங்கள் படத்திற்கு சரியாக பொருந்துகிறது” என்பதே அவர்களின் பதிலாக இருக்கும்.

பழைய திரைப்பட தலைப்புகளை அதிகமாக பயன்படுத்தும் நடிகர்களில் சிவகார்த்திகேயன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இதுவரை அவருடைய படங்களுக்கு “எதிர்நீச்சல், காக்கிசட்டை, வேலைக்காரன், மாவீரன், அமரன்” ஆகிய ஐந்து பழைய திரைப்படங்களின் தலைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது, அவரது ஆறாவது படத்திற்கு ‘பராசக்தி’ என்ற தலைப்பும் வைக்கப்பட்டுள்ளது.

இந்த தரவரிசையில் தனுஷ் முதலிடத்தில் இருக்கிறார். அவருடைய படங்களுக்கு “பொல்லாதவன், படிக்காதவன், உத்தமபுத்திரன், மாப்பிள்ளை, தங்கமகன், அசுரன், கர்ணன், மாறன், நானே வருவேன்” ஆகிய ஒன்பது பழைய திரைப்பட தலைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ‘பராசக்தி’ என்ற தலைப்பை மீண்டும் பயன்படுத்துவதைப் பற்றி பல திரைப்பட ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News