Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

‘மதகஜராஜா’ பாணியில் பல வருடங்கள் கழித்து வெளியாகும் விமல் சூரியின் படவா… எப்படிப்பட்ட படம் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சுந்தர் சி இயக்கத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம் உள்ளிட்டோர் நடித்த ‘மதகஜராஜா’ படம் கடந்த 12 ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது. சமீபத்தில் இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வந்து வெற்றிப் பெற்றதால், தமிழ் சினிமாவில் கிடப்பில் இருக்கும் பல படங்களை வெளியிடுவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதில் கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘துருவ நட்சத்திரம்’ படத்தையும் வெளியிட கடுமையான பணிகள் நடந்து வருகின்றன. கவுதம் மேனன் கூட இந்த படத்தை மே மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார்.

இதுபோலவே கடந்த 6 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த ‘படவா’ படமும் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. கே.வி.நந்தா இயக்கிய இப்படத்தில் விமல், ஸ்ரிதா ராவ், கே.ஜி.எப் ராம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். காதலும், காமெடியும் கலந்த படமாக உருவான இப்படம், சில பிரச்னைகளால் வெளியாகாமல் இருந்தது. தற்போது பிப்ரவரி 14ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News