Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

ரவி மோகனின் RM34 டைட்டில் நாளை வெளியீடு… ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்பார்ப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன் .இவர் நடித்த ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, வெளியான ‘இறைவன், சைரன்’ படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியானது ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம். இப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது. சுதா கொங்கரா இயக்கும் சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே ரவி மோகனின் 34-வது படத்தை ‘டாடா’ பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்குவதாக போஸ்டரை பகிர்ந்து பட நிறுவனம் கடந்த அக்டோபரில் அறிவித்தது. ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இந்நிலையில் ரவி மோகனின் 34 படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோவை நாளை காலை 11 மணிக்கு படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் ரவி மோகன் ஒரு அரசியல்வாதியாகவும் கராத்தே மாஸ்டராகவும் நடித்துள்ளார் என தகவல் வெளியாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News