Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

தொடர்ந்து சறுக்கும் அக்ஷய் குமார்… கைக்கொடுக்குமா ‘ஸ்கை போர்ஸ்’ ?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் அக்ஷய்குமார். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக, அவரது படங்கள் பெரும் வசூலைப் பெறாமல் தடுமாறி வருகின்றன.

2020ல் வெளியான ‘லட்சுமி’ படத்திலிருந்து, அவர் நடிப்பில் வெளிவந்த பத்துக்கும் மேற்பட்ட படங்கள் தோல்வியடைந்தன. ‘சூர்யவன்ஷி’ படம் மட்டுமே வியாபார ரீதியில் வெற்றியை பெற்றது.

இந்த நிலையில், கடந்த வாரம் வெளியான ‘ஸ்கை போர்ஸ்’ படம், வார இறுதி வரை 70 கோடி வரை வசூலித்துள்ளது. இப்படத்திற்கான விமர்சனங்கள் பலனுள்ளதாகவும், ரசிகர்களின் பாராட்டுகளால் படம் பிடித்திருப்பதாலும் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்றுவருகிறது. இதன் மூலம், இந்தப் படம் அக்ஷய்குமார் கேரியரை மீட்டெடுக்க உதவும் என பாலிவுட்டில் நம்பப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News