Thursday, January 23, 2025

தனது அடுத்தப் படத்தின் படப்பிடிப்பை சத்தமில்லாமல் முடித்த நடிகர் கவின்… ரிலீஸ் எப்போது தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கவின், தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய முன்னணி நடிகராக திகழ்கிறார். அவரது நடிப்பில் வெளிவந்த “லிப்ட்,” “டாடா,” “ஸ்டார்” ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. எனினும், சமீபத்தில் வெளியான “பிளடி பேக்கர்” திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில், அவர் தற்போது பிரபல நடன இயக்குனர் சதீஷ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்கிறார். “அயோத்தி” படத்தில் நடித்த பிரீத்தி அஸ்ரானி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். மேலும், “டாடா” படத்தின் இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார்.

படத்தின் பெயர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், “கிஸ்” என பெயரிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளதாக தயாரிப்பாளர் ராகுல் தனது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். இந்தப் படத்தை வரும் மார்ச் மாதத்தில் வெளியிட தயாரிப்பு குழு திட்டமிட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News