தமிழ் சினிமாவில் இன்றைய முன்னணி இசையமைப்பாளர் என்றால் அது அனிருத்த்தான். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி, ஹிந்தி திரைப்படங்களிலும் தனது குரலை பதித்துள்ளார். தற்போது அவர் “கூலி,” “விடாமுயற்சி” உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருவதுடன், அடுத்ததாக “ஜெயிலர் 2” படத்துக்கும் இசையமைக்கிறார்.
இந்தச் சூழ்நிலையில், “ஜெயிலர் 2” படத்துக்காக அனிருத் பெற்ற சம்பளம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் இந்த படத்துக்காக 18 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது.
இது உண்மை எனக் கருதினால், அனிருத்த் தனது சம்பளத்தால் ஏ.ஆர். ரஹ்மானையும் மிஞ்சியுள்ளார். ஏனெனில், ரஹ்மான் தற்போது சுமார் 12 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக பெறுகிறார் என்ற தகவல் குறித்த செய்திகளும் சினிமா துறையில் பரவியுள்ளன.