Saturday, January 18, 2025

அஜித் சார் பல தலைமுறைகளுக்கு முன்மாதிரி எனக்கும் அவர்தான் இன்ஸ்பிரேஷன் – நடிகர் மணிகண்டன் OPEN TALK!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“குட் நைட்” மற்றும் “லவ்வர்” திரைப்படங்களை தொடர்ந்து நடிகர் மணிகண்டன், “குடும்பஸ்தன்” படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.இப்படத்தை “நக்கலைட்ஸ்” புகழ் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியுள்ளார். இதில் குரு சோமசுந்தரம் மற்றும் சன்வி மேகனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் ஜனவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்காக படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மணிகண்டனிடம், நடிகர் அஜித் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “அஜித் சார் பல தலைமுறைகளுக்கு முன்மாதிரியாக உள்ளார். அவர் தனது ஆர்வத்தை ஒருபோதும் கைவிடவில்லை. அதற்கான பலன்களை இன்று நாம் காணும் போது, அது அனைவருக்கும் பேருத்வேகமாக உள்ளது. கடின உழைப்பால் வெற்றி அடைய முடியும் என்பதற்கான சிறந்த உதாரணமாக அவர் இருக்கிறார்” என தெரிவித்தார்.மணிகண்டனின் இந்த கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி, ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது.

- Advertisement -

Read more

Local News