Saturday, January 18, 2025

உணர்ச்சிபூர்வமான உறவைப் பேசும் படம் தான் சூரியின் மாமன் – இயக்குனர் பிரசாந்த்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாமன்.‌இந்தப் படத்தில் சூரி, ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர் மற்றும் மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பை ஹேஷாம் அப்துல் வஹாப் மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பின் பொறுப்பை கணேஷ் சிவா ஏற்றுக் கொண்டுள்ளார், மேலும் கலை இயக்கம் ஜி. துரை ராஜ் கவனிக்கிறார்.

தாய் மாமன் உறவின் இனிமையை மண் மணம் கமழும் சினிமாவாக இப்படம் உருவாகி வருகிறது. தயாரிப்பாளர் கே. குமார், லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் இந்த படத்தை தயாரித்துள்ளார். இப்படம் குறித்த இயக்குநர் கருத்து தெரிவிக்கையில், “ஆறு வயது சிறுவனுக்கும், அவரது தாய் மாமனுக்கும் இடையேயான உணர்ச்சிபூர்வமான உறவைப் பேசும் படம் இது. குடும்பத்தினருடன் வந்து ரசிக்கும்படியான ஒரு ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி வருகிறது,” என்றார்.

மாமன் திரைப்படத்தின் படப்பிடிப்பு திருச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, சூரியின் தோற்றம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் படம் எதிர்வரும் கோடை விடுமுறையில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக படக்குழுவினர் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News