தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அதிகமான ரசிகர்களை பெற்ற நடிகை ஓவியா, இன்றும் தனது அழகிய தனித்துவத்தால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னர், ஓவியா சற்குணம் இயக்கிய 2010 ஆம் ஆண்டு வெளியான களவாணி திரைப்படத்தில் மகேஷ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். விமலுக்கு ஜோடியாக நடித்த இப்படம் நகைச்சுவைத் திரைப்படமாக ரசிகர்களிடையே வெற்றிப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, மத யானைக் கூட்டம், மன்மத அம்பு, முத்துக்கு முத்தாக, கலகலப்பு, மூடர் கூட்டம், யாம் இருக்க பயமேன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை நிரூபித்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, ஓவியாவுக்கு சில திரைப்பட வாய்ப்புகள் மட்டுமே கிடைத்தன. ஆனால் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட ஒரு வீடியோவில், சில ஆண்கள் அவரைச் சுற்றி நின்றுகொண்டு இருப்பதையும், ஒரே குத்தில் அவர்களை விரட்டும் காட்சியையும் காட்டியுள்ளார். இந்த வீடியோ ஒரு படத்திற்கான ரிகர்சல் என கூறப்படும் நிலையில் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது மற்றும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.