Saturday, January 18, 2025

பச்சை நிற சேலையில் ரசிகர்கள் மனதை பற்ற வைத்த நடிகை கிரண்… வைரல் கிளிக்ஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விக்ரம் நடித்த “ஜெமினி” திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான நடிகை கிரண், தனது முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.அதன் பின்னர், நடிகை கிரண் தமிழ் மட்டும் இல்லாமல் பிற மொழிகளிலும் ரசிகர்களை ஈர்த்தார். இவரது முதல் படத்துக்குப் பிறகு, கமலஹாசனுடன் இணைந்து சுந்தர் சி இயக்கிய “அன்பே சிவம்” படத்தில் நடித்தார். இதற்குப் பிறகு, அஜித் இரட்டை வேடத்தில் நடித்த “வில்லன்” மற்றும் பிரசாந்த் நடித்த “வின்னர்” படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.

கிரண் நடித்த அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற்றதால், தமிழ் சினிமாவில் அவர் பெரும் புகழை பெற்றார். ஆனால், சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ வேண்டிய நடிகை கிரண், தனிப்பட்ட வாழ்க்கையில் காதல் தோல்வி அடைந்ததால், மன அழுத்தத்தால் வெளியே அதிகம் தலைகாட்டாமல் இருந்தார். காதல் தோல்வியில் இருந்து மீண்ட அவர் திரும்ப வாய்ப்புகளை தேடினார். ஆனால், அதற்குள் அவரது மார்க்கெட் குறைந்துவிட்டது.

இன்றைய சூழலில், கிரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகளவு ரசிகர்களை கொண்டுள்ளார். மேலும், தொடர்ந்து கவர்ச்சிகரமான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் வெளியிட்ட சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது மற்றும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News