Thursday, January 16, 2025

கேம் சேஞ்சர் படம் எப்போதும் என் இதயத்தில் உயர்வான இடத்தில் இருக்கும் – நடிகர் ராம் சரண் Open Talk!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ராம் சரண், தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகிய கேம் சேஞ்சர் படத்தில் நடித்துள்ளார். கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்த இப்படம் கடந்த மாதம் 10-ஆம் தேதி வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில், ராம் சரண் ஒரு நேர்காணலில் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: “கேம் சேஞ்சர் படத்திற்கு நாங்கள் செய்த உழைப்பை மதித்து, அதை பயனுள்ளதாக்கியதற்காக நான் என் இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். திரைமுன் மற்றும் திரைபின்னால் உழைத்த அனைவருக்கும் நான் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.

கேம் சேஞ்சர் படம் எப்போதும் என் இதயத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும். உங்களில் வெளிப்படையான அன்பிற்கும் ஆதரவிற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நீங்கள் மற்றும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு மகிழ்ச்சியான புத்தாண்டும் பொங்கல் வாழ்த்துகளும்,” என்று தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News