2012 ஆம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் விக்ரம் பிரபு. இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆனால் அதன்பின்னர் அவர் நடித்த படங்கள் பெரிதளவில் வெற்றியை பெற்றதாக இல்லை.
2022 ஆம் ஆண்டு, நடிகரும் இயக்குநருமான தமிழ் இயக்கிய டாணாக்காரன் திரைப்படம் விக்ரம் பிரபுவின் நடிப்பில் வெளியானது. நேரடியாக ஓ.டி.டியில் வெளியாகிய இந்த படம், விக்ரம் பிரபுவுக்கு “கம் பேக்” படம் என பாராட்டப்பட்டது. பின்னர், 2023 ஆம் ஆண்டில், யுவராஜ் தயாளன் இயக்கிய இறுகப்பற்று திரைப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
இதற்கிடையில், இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் உருவாகும் காதி திரைப்படத்தில், அனுஷ்கா ஷெட்டியுடன் விக்ரம் பிரபு நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தின் மூலம் அவர் தெலுங்கு திரையுலகில் தனது முதல் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.நேற்று, விக்ரம் பிரபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, காதி படக்குழு ஒரு கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது. இது அவரது ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.