துபாயில் நடைபெற்ற 24H சீரிஸ் கார் பந்தயத்தில், அஜித் குமார் தலைமையிலான ரேசிங் அணி மூன்றாவது இடத்தை பிடித்து பாராட்டுக்குரிய சாதனை நிகழ்த்தியது. வெற்றி பெற்றதை அனுசரித்து, நடிகர் அஜித் குமார் இந்திய தேசியக் கொடியுடன் நெடுஞ்சாலையில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வெற்றிக்காக அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து, நடிகர் அஜித் நன்றி தெரிவிக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “கார் ரேஸில் வெற்றியை பெற உதவிய எனது அணியின் உறுதிகரமான உழைப்புக்கு நன்றி. என் ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் எப்போதும் என்னுடன் இருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி” என்று அவர் கூறியுள்ளார்.