Wednesday, January 15, 2025

மதகஜராஜா 1000 கோடி வசூலிக்குமா? நான் வாய்விட்டு மாட்டிக்க விரும்பவில்லை – இயக்குனர் சுந்தர் சி பளீச்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஷால் நடிப்பில், சுந்தர் சி இயக்கத்தில், ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிப்பில் உருவாகி, 12 ஆண்டுகளாக ரிலீசாகாமல் இருந்த “மத கஜ ராஜா” திரைப்படம் ஜனவரி 12 ஆம் தேதி வெளியானது. இதில் விஷால் மற்றும் சுந்தர் சி முதல் முறையாக இணைந்தனர். அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சந்தானம், மணிவண்ணன், மனோபாலா உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. பொங்கல் போன்ற பண்டிகைக்கு மிகவும் பொருத்தமான, கலகலப்பான அம்சங்களுடன் “மத கஜ ராஜா” உருவாக்கப்பட்டுள்ளதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, மறைந்த நடிகர் மனோபாலா நடித்த கதாபாத்திரம் மிகவும் பாராட்டைப் பெற்று வருகிறது. பொங்கல் திருவிழாவிற்கு வெளியான பல திரைப்படங்களில், அதிக வசூல் செய்யும் படமாக “மத கஜ ராஜா” முன்னணியில் உள்ளது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்த இயக்குநர் சுந்தர் சி, அதன் பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், “மத கஜ ராஜா சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. 1000 கோடி வசூல் செய்யுமா?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சுந்தர் சி பதிலளிக்கையில், “அப்படியெல்லாம் வாய்விட்டு மாட்டிக்கொள்ள நான் விரும்பவில்லை. படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக நான் கண்ணீரோடு தான் இருக்கிறேன்,” என்று தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News