நடிகர் சரத்குமார், ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக விளங்கி வந்தவர். இப்போது கூட பிசியாக பல படங்களில் குணச்சித்ர வேடங்களில் மற்றும் அவ்வப்போது முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் சரத்குமாரின் 150வது படமாக ‘தி ஸ்மைல் மேன்’ என்ற சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் படம் வெளியானது. இதற்குப் பிறகு, அகில் எம். போஸ் இயக்கத்தில் உருவாகும் ‘ஏழாம் இரவில்’ என்ற புதிய படத்தில் சரத்குமார் நடிக்கவுள்ளார்.
இப்படமும் வித்தியாசமான திரைக்கதையுடன், திரில்லர் வகை படமாக உருவாகின்றது. பொங்கல் பண்டிகையையொட்டி, இந்தப் படத்திற்கான அறிவிப்பு மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.