Wednesday, January 15, 2025

திரை பிரபலங்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய தளபதி விஜய்… வைரல் வீடியோ!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் எச். வினோத் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம், தற்காலிகமாக “தளபதி 69” என்று அழைக்கப்படுகிறது. இதுவே நடிகர் விஜய்யின் கடைசி படம் எனக் கூறப்படுகிறது. இதில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, டிஜே மற்றும் பலர் நடிக்கின்றனர்.

தமிழர்களின் பொங்கல் பண்டிகையை, உலகமெங்கும் உள்ள தமிழர்கள் மிகக் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்கள் குடும்பத்துடன் பொங்கலை கொண்டாடி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் திருமணமான நடிகை கீர்த்தி சுரேஷ், தனது தல பொங்கலை இன்று கொண்டாடியுள்ளார். இதற்காக ஜெகதீஷ் பழனிசாமியின் தயாரிப்பு நிறுவனம் தி ரூட் ஒரு சிறப்புக் கொண்டாட்டத்தை நடத்தியது. அந்த நிகழ்ச்சியில், நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ், ஆண்டனி தட்டில், கல்யாணி பிரியன், கதிர், மமிதா பைஜூ, சஞ்சனா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் பலவித விளையாட்டுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்த கொண்டாட்டத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News