Tuesday, January 14, 2025

ஸ்டைல் மாஸ் ஆக்‌ஷன் என தெறிக்க விட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… வெளியான ஜெயிலர் 2 அறிவிப்பு டிஸர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது ‘ஜெயிலர்’ திரைப்படம். அதற்குப் பின்னர் அவர் நடித்த ‘வேட்டையன்’ திரைப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. தற்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ எனும் திரைப்படத்தில் ஆக்சன் மற்றும் விறுவிறுப்பான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்தநிலையில், ‘ஜெயிலர்’ பட குழு மீண்டும் இணைவது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, இன்று (ஜனவரி 14) பொங்கல் பண்டிகை நாளில், ‘ஜெயிலர் 2’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எப்போதும் போல நெல்சன் படங்களுக்கான ப்ரோமோ அறிவிப்பு மிகவும் தனித்துவமாக உருவாக்கப்பட்டு, கோவாவில் அனிருத் மற்றும் நெல்சன் படத்தின் ஸ்டோரி குறித்து பேசுவது போன்று சுவாரசியமாகவும் அதிரடியாகவும் இந்த அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கோவாவை பின்னணியாகக் கொண்டு இப்படம் உருவாக உள்ளது என்பது போல் தெரிகிறது. இதன் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் இந்த இரண்டாம் பாகத்தில் நடிப்பார்களா என்பது பின்னர் தான் தெரியவரும். மேலும், முதல் பாகத்தில் நடித்த அனைவரும் இந்தப் படத்தில் தொடர்ந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News