Tuesday, January 14, 2025

அஜித் வாழ்க…விஜய் வாழ்க என்கிறார்கள்… நீங்க எப்போ வாழ போறீங்க? – ரசிகர்களுக்கு அன்பான அட்வைஸ் கொடுத்த அஜித்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். அண்மையில் அவர் துபாயில் நடைபெற்ற Dubai 24H Race கார் பந்தயத்தில் பங்கேற்றார். இந்தப் போட்டியில் அஜித் நடத்திய பாஸ் கோட்டன் அணி, ரேசிங் 991 பிரிவில் மூன்றாவது இடத்தை பிடித்து சிறப்பாக செயல்பட்டது.

இந்த சாதனையுக்குப் பிறகு, நடிகர் அஜித்துக்கும் அவரது அணியினருக்கும் பல்வேறு தரப்பினரிடமிருந்து வாழ்த்துகள் தொடர்ந்து வருகின்றன. இதற்கிடையில், கார் பந்தயத்திற்குப் பிறகு அஜித் அளித்த பேட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அப்பொழுது அவர் கூறியது, அஜித் வாழ்க, விஜய் வாழ்க என்று சொல்லிக் கொண்டே இருந்தால், நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்? உங்கள் அனைவரின் அன்பிற்கும் நன்றி. ஆனால் முதலில், உங்கள் வாழ்க்கையை சிறப்பாக வாழுங்கள். நான் மிகவும் மகிழ்ச்சியான மனிதனாக இருக்கிறேன். அதேபோல, என்னுடைய ரசிகர்களும் தங்களுடைய வாழ்க்கையில் முன்னேறி சிறப்பாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -

Read more

Local News