களவாணி, மதயானை கூட்டம் போன்ற படங்களில் நடித்ததின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ஓவியா. மேலும், அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரின் மனதை வென்றார்.
தற்போது, ஓவியா அளித்திருக்கும் பேட்டியில் தனது வாழ்க்கை தொடர்பாக திறந்த மனதுடன் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். ஓவியா, ஒரு யூட்யூப் சேனலுக்கான பேட்டியில், “ரூமர்களை நான் பார்த்து ஒருபோதும் பயந்ததில்லை. அப்படி பயப்படும் தன்மையுடையவள் நான் அல்ல. என்னைப்பற்றி பலர், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதாக கூறுகிறார்கள். உண்மையில், நான் சிறுவயதிலிருந்தே குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தேன். ஆனால் தற்போது, குடி எனக்கு போர் அடித்துவிட்டது.நான் எந்த விஷயத்திலும் எக்ஸ்ட்ரீமாக சென்று அதை அனுபவித்து, பின்னர் அதிலிருந்து வெளியேறுவேன். அதுதான் என் வழக்கம். தற்போது, குடியும் இல்லை, எந்தப் பழக்கமும் இல்லை. சும்மா நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்.
சிலர் எனக்கு குழந்தை இருப்பதாகவும், அந்த குழந்தை துபாயில் வளர்ந்து வருவதாகவும் வதந்தி பரப்புகிறார்கள். உண்மையில், எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது, அது நான் வளர்க்கும் என் நாய். உண்மையாகவே, அதுவே என்னுடைய குழந்தை. உறங்குவது, சாப்பிடுவது, விளையாடுவது என எல்லாவற்றிலும் நான் அதனுடன் தான் இருக்கும். மனிதர்களுடன் இருப்பதைவிட, நாயுடன் இருப்பது எனக்கு மிகவும் காம்பர்டபிளாக உள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.