Monday, January 13, 2025

ஒரே சமயத்தில் தனுஷ் மற்றும் சூரியின் அடுத்த பட அப்டேட்கள் கொடுத்த பிரபல பட தயாரிப்பு நிறுவனம்… ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருக்கும் வெற்றிமாறன், கடந்த டிசம்பர் மாதம் ‛விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட்டார். முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகம் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தாதபோதிலும், படம் லாபம் நடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

‛விடுதலை 2′ வெளியாகி இன்றோடு 25 நாட்கள் ஆகிறது. இதை மகிழ்ச்சியுடன் அறிவித்த ஆர்எஸ் இன்போடெயின்ட்மென்ட் நிறுவனம், ‛இந்த படத்தை வெற்றி படமாக்கிய படக்குழுவினரும், ரசிகர்களும் நன்றிக்குரியவர்கள்’ என தெரிவித்துள்ளது. அதுடன், தங்களது நிறுவனத்தின் இரு புதிய படங்களின் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, ஒரு படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார், அதற்கு வெற்றிமாறன் இயக்குநராக செயல்படுகிறார். ‛பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன்’ படங்களுக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைய உள்ளது. மற்றொரு படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கவுள்ள நிலையில், சூரி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். ‛விடுதலை 1 மற்றும் 2′ படங்களில் நடித்த சூரி, இந்த புதிய படத்திலும் கதாநாயகனாக தொடருகிறார். வெற்றிமாறன் குழுவில் இருந்து வந்தவர் மதிமாறன், ஏற்கனவே ‛செல்பி’ படத்தை இயக்கியவர். விரைவில் இந்த புதிய படம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News