சமூக வலைதளத்தின் மூலம் புகழ்பெற்று, சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் மிருணாளி ரவி. “சூப்பர் டீலக்ஸ்” படத்தின் மூலம் சினிமா வாழ்க்கையை தொடங்கிய அவர், அதன் பிறகு “எம்.ஜி.ஆர். மகன்,” “கோப்ரா,” “எனிமி,” “ரோமியோ” போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போது மிருணாளி ரவி, “பொங்கல் காலத்தில் நான் இதுவரை மதுரை வந்ததில்லை. ஆனால் இப்போது ஊரே திருவிழா கோலமாக இருக்கிறது.
மதுரை பொண்ணு போல் பேச ஆசையாக இருக்கிறது. எனக்கு மதுரை வட்டார வழக்கு தெரியாது, ஆனால் வாய்ப்பு கிடைத்தால் கற்றுக்கொண்டு நடிப்பேன். அதை யாரும் சரியாக இல்லை என்று சொல்லக்கூடாது. மதுரை பொண்ணு போல பேசினால் போதும் என எண்ணுகிறேன்” என்று கூறினார்.