Friday, January 10, 2025

துப்பறிவாளன் பட நடிகையின் பூமராங்… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை அனு இம்மானுவேல், விஷாலுடன் துப்பறிவாளன் மற்றும் சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை படங்களில் நடித்து பிரபலமானார். கடைசியாக தமிழில் கார்த்தியுடன் ஜப்பான் படத்தில் நடித்திருந்த இவர், தற்போது தெலுங்கில் பூமராங் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் அனுவுடன் ஷிவா கந்துகுரி, வெண்ணிலா கிஷோர் மற்றும் ஹர்ஷா செமுடு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லண்டன் கணேஷ் மற்றும் பிரவீன் ரெட்டி வூட்லா தயாரிக்கின்ற இப்படத்துக்கு அனுப் ரூபன்ஸ் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார்.

திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் ஆண்ட்ரூ பாபு இயக்குகிறார். இதன் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது, மேலும் அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News