Friday, January 10, 2025

இத்தனை சவால்களா? அஜித்குமார் பங்கேற்கும் 24 மணிநேர ரேஸ் குறித்து தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அஜித்குமார் மற்றும் அவரது அணி பங்கேற்கும் கார் ரேஸ் என்பது எண்டுரன்ஸ் பார்மட் ரேஸ் ஆகும். இந்த ரேஸ் 24 மணி நேரம் தொடர்ந்து நடைபெறும். அதாவது இன்று மதியம் 1 மணிக்கு தொடங்கும் இந்த ரேஸ், நாளை மதியம் 1 மணிக்குக் கட்டுப்படுத்தப்படும். இந்த 24 மணி நேர காலக்கட்டத்தில், அதிக தூரம் தாண்டும் அணிகளே அடுத்த சுற்றுக்கு முன்னேறக்கூடிய வாய்ப்பைப் பெறும்.

இந்த வகை ரேஸில் பங்கேற்கும் வீரர்கள், சுமார் 240 கிலோமீட்டர் வேகத்தில் கார்கள் ஓட்டுவார்கள். இத்தகைய மிகுந்த வேகத்தில், ஒருவரின் சிறிய தவறும் பந்தய ஓடுதளத்தில் பெரும் அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இது மனநிலையில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும். மேலும், 24 மணி நேரம் ஒருவரே கார் ஓட்ட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

ஒவ்வொரு அணியிலும் குறைந்தபட்சம் மூன்று வீரர்கள் முதல் அதிகபட்சம் ஐந்து வீரர்கள் வரை இருக்கிறார்கள். அஜித்குமாரின் அணியில் அஜித்குமார், ஃபெபின், மேத்யூ மற்றும் காம் என மொத்தம் நான்கு வீரர்கள் உள்ளனர். இவர்கள் மாறி மாறி கார் ஓட்டுவதால், ஒவ்வொருவரும் குறைந்தது ஆறு மணி நேரம் கார் ஓட்ட வேண்டும்.

இந்த ரேஸில் மிகவும் கவனமாக கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்று காரின் தரத்தை சரியாக பரிசோதிப்பதே. ஒரு காரின் ரெஸ்டிங் பீரியட் மிகக் குறைவானது; 45 முதல் 55 நொடிகளில் சக்கரங்களை மாற்றி, எரிபொருள் நிரப்பி, அவசர சிக்கல்களை சரி செய்ய வேண்டும். மேலும், ஓட்டுநரை மாற்ற வேண்டும் என்றால் அதற்கான வேலைகளும் இதே நேரத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். இந்த வகை சவால்கள் மற்றும் அபாயங்கள் பல இருந்தும், அஜித்குமார் தனது அணியுடன் இந்த ரேஸில் பங்கேற்றுள்ளார். அவருக்கும், அவரது அணிக்கும் வாழ்த்துக்கள் மழையென பொழிகின்றன.

- Advertisement -

Read more

Local News