Thursday, January 9, 2025

விடாமுயற்சி படத்தின் நீளம் இதுதானா? வெளியானது சென்சார் தகவல்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி இணைந்துள்ள திரைப்படம் விடாமுயற்சி. இதில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விடாமுயற்சி திரைப்படத்திற்கான இசையமைப்பை அனிருத் மேற்கொண்டுள்ளார். ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் செயல்படுத்த, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் செய்துள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் வெளியான டீசரும் முதல் பாடலும் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

பொங்கல் பண்டிகை நாளில் இந்த படம் வெளியாகும் என்று ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்தது. இதனிடையே, விடாமுயற்சி படத்தின் சென்சார் விவரங்கள் வெளிவந்துள்ளன.சென்சார் போர்டு இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதன் நேரம் 2 மணி 30 நிமிடங்கள் ஆகும். சில வார்த்தைகள் மட்டுமே மியூட் செய்யப்பட்டுள்ளது என்று சென்சார் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் ஜனவரி 23 அல்லது 30 ஆம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News