Wednesday, January 8, 2025

10,000 இசையமைப்பாளர்கள் உள்ள இடத்தில் நிலைத்து நிற்பது திறமையில்லாமல் சாத்தியமில்லை… அனிருத்தை புகழ்ந்த ஏ.ஆர்.ரகுமான்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள படம் ‘காதலிக்க நேரமில்லை’. இப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் பணியாற்றியுள்ளார்.

மேலும், இப்படத்தில் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடிப்பில் கலந்து கொண்டுள்ளனர். கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்தின் படத்தொகுப்பை லாரன்ஸ் கிஷோர் மேற்கொண்டுள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நகரில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினருடன் அனிருத், இயக்குநர் மிஷ்கின் மற்றும் திரையுலகத்தின் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் கலந்து கொண்டு ஏ.ஆர். ரஹ்மான் பேசுகையில், “அனிருத் மிகவும் சிறப்பாக இசையமைக்கிறார். இத்தகைய பெரிய படங்களுக்கு ஹிட் கொடுக்கிறார். 10,000 இசையமைப்பாளர்களுக்குள் நிலைத்து நிற்பது என்பது திறமையில்லாமல் சாத்தியமில்லை. அவர் அந்த எல்லாவற்றையும் சாதித்து தைரியமாக கூறுகிறார்… ‘தலைவன் தலைவன் தான், தொண்டன் தொண்டன் தான்’ என்று சொல்லும் பணிவு மிக முக்கியம். உங்களுடைய வெற்றிக்கு வாழ்த்துக்கள்! எனக்கு உங்களிடம் ஒரு வேண்டுகோள் உள்ளது. நீங்கள் க்ளாசிக்கல் இசையை படித்துவிட்டு, அதில் பல பாடல்கள் உருவாக்க வேண்டும். இதன் மூலம் இளம் தலைமுறைக்கு அந்த இசை கிடைக்கும்,” என உரையாற்றினார்.ஏ.ஆர். ரஹ்மான் பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News