தமிழ் திரைப்பட உலகின் முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் அஜித் குமார். தற்போது அவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் “விடாமுயற்சி” படத்திலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் “குட் பேட் அக்லி” படத்திலும் நடித்துள்ளார். இதில் “குட் பேட் அக்லி” படம் வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.
அஜித்தின் நடிப்பு திறமையை மட்டுமின்றி, பைக் மற்றும் கார் ஓட்டுவதிலும் அவரது ஆர்வம் அதிகம் என்பதும் ரசிகர்களுக்கு நன்கு அறிந்த விஷயமாகும். சமீபத்தில் “அஜித் குமார் ரேசிங்” என்ற பெயரில் புதிய கார் ரேசிங் அணியை உருவாக்கியுள்ள அஜித், தற்போது அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டுவருகிறார்.
இதனைத் தொடர்ந்து, கார் ரேஸிங்கில் பங்கேற்கும் நோக்கில் நேற்று அஜித் துபாய் புறப்பட்டார். அந்த இடத்தில், தனது அணியினருடன் அஜித் இருக்கும் ஒரு வீடியோ தற்போது வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கார் ரேஸிங்கில் கலந்துகொள்ளும் அஜித்தின் இந்த முயற்சி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.