ஹிந்தி படங்களில் நடித்து வந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், ஜூனியர் என்டிஆர் உடன் தேவரா என்ற படத்தில் நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து தற்போது ராம்சரண் நடிக்கும் 16 வது படத்திலும் அவருக்கு ஜோடியாக கமிட்டாகி இருக்கிறார். மேலும், ஷிகர் பஹாரியா என்ற தனது பாய் பிரண்டுடன் டூர் செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கும் ஜான்வி கபூர், நேற்று தனது பாய் பிரண்டுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்திருக்கிறார். பாதயாத்திரையாக 3550 படிகள் ஏறி நடந்தே சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் ஜான்வி. அது குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more