கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‛ரெட்ரோ’ படத்தில் நடித்ததை முடித்துக்கொண்ட சூர்யா, தனது அடுத்த படமாக ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார்.
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணியாற்றுகிறார். இந்த படத்தில் நடிகை த்ரிஷா கதாநாயகியாக நடிக்கின்றார். அதுடன், சுவாசிகா, நட்டி நட்ராஜ், இந்திரன்ஸ், சிவதா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு ஏற்கனவே கோவையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சூர்யா ஒரு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சூர்யாவுக்கு எதிரான தரப்பில் வழக்கறிஞராக ஆர்.ஜே. பாலாஜி நடிக்கிறார் என கூறப்படுகிறது. மேலும், இந்த எதிர் வழக்கறிஞர் கதாபாத்திரம் நெகட்டிவ் கேரக்டராக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.