Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

ஓயாத வசூல் வேட்டை… 2000 கோடியை தொடுமா புஷ்பா 2… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2021-ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த “புஷ்பா: தி ரைஸ்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன் தொடர்ச்சியாக, “புஷ்பா 2: தி ரூல்” பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்டது. இப்படம் கடந்த 5-ந் தேதி வெளியானதிலிருந்து ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது.

இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் சாம் சி எஸ் ஆகியோர் இசையமைத்தனர். தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிய இப்படம் 6 நாட்களில் ரூ.1002 கோடி வசூலை எட்டியது.

14 நாட்களில் ரூ.1508 கோடி வசூல் செய்ததாக படக்குழு அறிவித்தது. இப்போது, 28 நாட்களில் இப்படம் ரூ.1799 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்திய சினிமாவின் வரலாற்றில் வசூல் சாதனையை படைத்த படமாக “புஷ்பா 2” மேலும் ஒரு பெருமையைப் பெற்றுள்ளது.

- Advertisement -

Read more

Local News