Wednesday, January 1, 2025

எனக்கு பாலிவுட் பிடிக்கவில்லை… இங்கு எதுவும் சரியில்லை… நடிகர் அனுராக் காஷ்யப் பரபரப்பு பேட்டி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அனுராக் காஷ்யப் தமிழில் மகாராஜா’, விடுதலை 2′, மலையாளத்தில் `ரைஃபிள் க்ளப்’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில், ஹாலிவுட் ரிப்போர்ட்டர் India’s பதிப்பிற்காக அவர் ஒரு நேர்காணல் வழங்கியிருந்தார், அதில் பாலிவுட் குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். இந்த கருத்துக்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

அந்த நேர்காணலில் அவர் கூறியது, “இப்போது பணத்தை அதிகமாக செலவிடும் முயற்சிகளை செய்ய நான் மிகவும் தயங்குகிறேன். எனது தயாரிப்பாளர்கள் அவை மூலமாக எந்தளவிற்கு லாபம் கிடைக்கும் என்று மட்டும் யோசிக்கிறார்கள். ஒரு படத்தை ஆரம்பிக்கும் முன்பே, அந்தப் படம் எப்படி வியாபாரமாக மாறும் என்பதை முதன்மையாக கவனிக்கிறார்கள். இதனால், ஒரு திரைப்படத்தை இயக்கும்போது கிடைக்கும் சந்தோஷத்தை அது பறித்துக்கொள்கிறது. அதனால்தான் 2025-ஆம் ஆண்டு மும்பையை விட்டுவிட்டு தென்னிந்தியாவுக்கு செல்வதற்கு முடிவு செய்துள்ளேன்.

நான் என் சினிமா துறையை (பாலிவுட்) நினைக்கும் போது மிகவும் ஏமாற்றமாகவும், சில சமயங்களில் அருவருப்பாகவும் உணர்கிறேன். `மஞ்சும்மல் பாய்ஸ்’ போன்ற படங்கள் இந்தியில் உருவாகாது. ஆனால், அதை ரீமேக் செய்ய முயற்சிப்பார்கள். இங்கு யாரும் புதுமையான முயற்சிகளை செய்ய விரும்புவதில்லை. மக்களால் ஏற்கெனவே விரும்பப்பட்ட விஷயங்களை மட்டுமே தொடர்ந்து படம் பிடிக்கின்றனர். இது தான் இங்கே உள்ளவர்களின் மனோபாவமாக இருக்கிறது, அதை நினைக்கும் போது உண்மையாகவே அருவருப்பாக இருக்கிறது,” என அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News