Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

இந்த விஷயங்கள் எல்லாம் என்னை மிகவும் பாதித்தது… நடிகை கிருத்தி சனோன் OPEN TALK!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல பாலிவுட் நடிகை கிருத்தி சனோன், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பிரபாஸ் நடிப்பில் வெளியான “ஆதிபுருஷ்” படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில், “க்ரூ” மற்றும் “டூ பட்டி” திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

அதன் பிறகு, நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன. தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வரும் கிருத்தி, படங்களின் புரமோஷனுக்காக அதிகமாக பயணம் செய்தது தன்னை மனதளவில் பாதித்ததாக பகிர்ந்துள்ளார்.

அவர் கூறுகையில், “படங்களின் புரமோஷன் எனை மிகவும் சோர்வாக்கியது. ‘பேடியா’ படத்தின் புரமோஷனின்போது இந்த உணர்வு ஏற்பட்டது. அந்த வருடம், நான் நடித்த இரண்டு முதல் மூன்று படங்கள் வெளியானது. ‘பேடியா’ படத்திற்காக பல இடங்களுக்கு தொடர்ச்சியாக பயணம் செய்தோம். குறிப்பாக இரவு நேரங்களில் அதிகமாக பணி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் உறக்கம் குறைவாக இருந்தது. இந்த உடல் சோர்வு, மனதளவிலும் என்னை பாதித்தது,” என உருக்கமாக கூறினார்.

- Advertisement -

Read more

Local News