கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 44வது படத்தில் நடித்துள்ளார். இதில் பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், சுஜித் ஷங்கர், பிரகாஷ் ராஜ், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு அந்தமான், கேரளா, மூணார் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
இந்நிலையில், “சூர்யா 44” படத்தின் டைட்டில் டீசர் கிறிஸ்துமஸ் பண்டிகை தினமான டிசம்பர் 25ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த படத்திற்கான தலைப்பு ‛ரெட்ரோ’ என அறிவிக்கப்பட்டதுடன், 2025 கோடை விடுமுறையில் வெளியிடப்படும் என கூறப்பட்டது. டீசரில் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே இடையே குளக்கரையில் உரையாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ஆனால், பூஜா ஹெக்டே பேசும் காட்சிகள் அல்லது வசனங்கள் டீசரில் இடம்பெறவில்லை. இதனால் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பிய நிலையில், பூஜா ஹெக்டே இந்த படத்தில் வாய் பேச முடியாதவராக நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.