பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஹிருத்திக் ரோஷன், 2006-ம் ஆண்டு வெளியான கிரிஷ் என்ற சூப்பர் ஹீரோ படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற்றார். அதன்பின், இப்படத்தின் தொடர்ச்சியாக அதன் 2-ம் மற்றும் 3-ம் பாகங்கள் வெளியானது. இதில், 3-ம் பாகம் கடந்த 2013-ம் ஆண்டு திரையரங்குகளில் வந்தது.

அதன்பிறகு, கிரிஷ் 4 படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக இப்படம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், கிரிஷ் 4 தொடர்பாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது, ஹிருத்திக் ரோஷன் நடித்து வரும் வார் 2 படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு, கிரிஷ் 4 படப்பிடிப்பில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. வார் 2 படத்தை, பிரம்மாஸ்திரா பட இயக்குனர் அயன் முகர்ஜி இயக்குகிறார். இந்த படத்தில் ஹிருத்திக்குடன், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் கியாரா அத்வானி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.