Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

லைப் ஆர்ட் கும்பமேளா 2025ல் இசை விழா அறிவிப்பை வெளியிட்ட பாடகர் உதித் நாராயணன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தியாவில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நிகழ்ச்சி நடக்கிறது. 2025ல் ஜனவரியில் இந்த நிகழ்ச்சி உ.பி., மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற உள்ளது. நாட்டின் பல ஊர்களில் இருந்து சாதுக்கள், லட்சக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்பர். இந்நிலையில் மும்பையில் இந்த நிகழ்வு தொடர்பான ‛லைப் ஆர்ட் கும்பமேளா 2025′-யை பிரபல பின்னணி பாடகர் உதித் நாராயண் மற்றும் ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பார் ரேன் மோர் ஆகியோர் அறிவித்தனர்.

இதே நிகழ்ச்சியில் ரேன் மோர் தயாரிக்கும் ‛தி கும்பா’ படத்தின் குறும்பட அறிவிப்பும் வெளியானது. இதனை ஹாலிவுட் இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளார்.ரேன் மோர் கூறுகையில், ‛‛கொரோனா காலத்தில் வித்தியாசமாக பெரிதாக ஒன்றைச் செய்ய நினைத்தேன். அப்போது தான் லைப் ஆர்ட் கும்பமேளா 2025 என்ற எண்ணம் தனது மனதில் தோன்றியது. இதுவரை நடக்காத நிகழ்வுகள் இந்த கண்காட்சியில் நடக்க போகிறது. ஆன்மிகம் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றின் அற்புதமான கலவையை இங்கே காணலாம். இதற்கு பிஎன் திவாரியின் ஒத்துழைப்பை நான் பெரிதும் பாராட்டுகிறேன்” என்றார்.

பாடகர் உதித் நாராயண் கூறுகையில், ‛‛12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா கொண்டாடப்படும் என்றும், இந்த முறை அடுத்த ஆண்டு 2025-ம் ஆண்டு பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. இந்தியா அழகான நாடு. அதன் கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், பாரம்பரியம் எல்லாமே அற்புதம்” என்றார்.லைப் ஆர்ட் கும்பமேளா 2025ல் இசை விழா மற்றும் திரைப்பட விழா தினமும் நடைபெறும் என்று கூட்டமைப்பின் தலைவர் பிஎன் திவாரி தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News