Wednesday, December 18, 2024

விடுதலை 2ம் பாகத்தில் திரையை ஆளப்போவது யார்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வெற்றிமாறன் இயக்கத்தில், இசைமாமனி இளையராஜா இசையமைத்த, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘விடுதலை 2’ திரைப்படம் நாளை மறுநாள், டிசம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

கடந்த ஆண்டில் வெளியான இதன் முதல் பாகத்தில் நடிகர் சூரி முக்கியமான பாத்திரத்தில் நடித்திருந்தார். அவருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்ட நிலையில், விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரமாக இருந்தாலும், குறைந்த நேரத்தில் மட்டுமே திரையில் தோன்றியிருந்தார்.

ஆனால், இரண்டாம் பாகத்தில் சூரியை விடவும் விஜய் சேதுபதிக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் விஜய் சேதுபதியின் பின்நிகழ்வுகள் (பிளாஷ்பேக்), மஞ்சு வாரியருடன் இருக்கும் காதல் என அவரை மையமாகக் கொண்டு கதை அதிகமாக பயணிக்கிறதாம். இதனால், முதல் பாகத்தில் விஜய் சேதுபதி எவ்வளவு நேரம் திரையில் தோன்றினாரோ, இரண்டாம் பாகத்தில் அதேபோல் சூரி இருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News