Wednesday, December 18, 2024

தமிழில் அறிமுகமாகும் துளு மொழிப்பட நடிகை நீமா ரே !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மகேந்திரா பிலிம் பேக்டரி சார்பில் மகேந்திரா தயாரிப்பில் உருவாகும் படம் ‘இரவின் விழிகள்’. சிக்கல் ராஜேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் மகேந்திரா கதாநாயகனாக நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். கதாநாயகியாக நீமா ரே நடித்துள்ளார். இவர் துளு மொழியில் வெளியான ‘பங்காரா’ படத்தில் நடித்திருக்கிறார், அந்த படம் சிறந்த துளு மொழி படமாக தேசிய விருது பெற்றது. மேலும் முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி இராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏஎம் அசார் இசையமைத்துள்ளார், பாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இயக்குனர் சிக்கல் ராஜேஷ் இப்படம் குறித்து கூறும்போது, “இந்தப் படம் சைக்கோ திரில்லர் வகையில் உருவாகியுள்ளது. ஒருவன் சைக்கோ ஆவதற்கு தனித்துவமான ஒரு காரணம் இருக்கும். இங்கே அந்த சைக்கோவின் தன்மைக்கு சமூகத்தின் மீதான கோபமும் பொதுவான காரணங்களும் அடிப்படையாக இருக்கின்றன. அந்த விஷயம் என்ன என்பதனை வித்தியாசமான கதை அமைப்புடன், பார்வையாளர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் விதமாக இந்த படம் தயாராகி வருகிறது என்றார். 

பெரும்பாலான படப்பிடிப்பு ஏற்காடு அருகிலுள்ள வெள்ளிமலை பகுதியில் நடைபெற்றுள்ளது. மேலும் புதுச்சேரி, மரக்காணம், அதன் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் திருப்பூரிலும் படப்பிடிப்பு 50 நாட்கள் நடைபெற்றுள்ளது. தற்போது போஸ்ட் புரடக்ஷன் பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

- Advertisement -

Read more

Local News