Tuesday, December 17, 2024

தி ராஜா சாப் படப்பிடிப்பில் பிரபாஸூக்கு ஏற்பட்ட காயம்…. நலமாக உள்ளதாக வெளியான தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடித்து உருவான படம் கல்கி 2898 ஏடி. இந்த படம் கடந்த ஜூன் 27ம் தேதி வெளியானது மற்றும் 1200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

இந்நிலையில், இந்த கல்கி படத்தை வரும் ஜனவரி 3ம் தேதி ஜப்பான் மொழியில் டப் செய்து வெளியிட முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, விரைவில் ஜப்பானில் பிரமோஷன் நிகழ்ச்சியை நடத்த அந்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், ராஜா சாப் படத்தின் சண்டைக் காட்சியில் நடித்த போது ஏற்பட்ட காயத்தினால், பிரபாஸ் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், கல்கி படத்திற்காக ஜப்பானில் நடைபெறவுள்ள பிரமோஷன் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள முடியாத நிலைமை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, ஜப்பான் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார் பிரபாஸ்.

- Advertisement -

Read more

Local News