Tuesday, December 17, 2024

இளையராஜா பயோபிக் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி… வெளியான புது அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இசையமைப்பாளர் இளையராஜா இந்திய திரைப்பட உலகில் இதுவரை 1500-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில், அவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருக்கிறார்.

இப்படத்தை கன்னெக்ட் மீடியா மற்றும் மெர்குரி என இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இயக்குநராக அருண் மாதேஸ்வரன் பணியாற்ற, இப்படத்திற்கு ‘இளையராஜா’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

கடந்த சில வாரங்களாக இப்படம் கைவிடப்பட்டுவிட்டதாக தமிழ் சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டது. ஆனால் சமீபத்தில் கிடைத்த தகவலின் படி, இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தாமதமடைந்ததால், படப்பிடிப்பு 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு துவங்கும் எனத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News