Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து மார்க் ஆண்டனி 2-ஐ கையில் எடுக்கிறாரா ஆதிக் ரவிச்சந்திரன்?#MarkAntony2

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஆதிக் ரவிச்சந்திரன், 2015ஆம் ஆண்டு ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பின்னர் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’, ‘காதலை தேடி நித்யானந்தா’, ‘வெர்ஜின் மாப்பிள்ளை’, ‘பஹீரா’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.தற்போது ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் குமாரை வைத்து ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் விஷாலை வைத்து ‘மார்க் ஆண்டனி 2’ படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், விஷால் ‘துப்பறிவாளன் 2’ படத்தை தானே இயக்கி நடிக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அதன் பணிகள் தாமதமாக உள்ளதால், விஷால் ‘மார்க் ஆண்டனி 2’ படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘குட் பேட் அக்லி’ படத்தை முடித்த ஆதிக் ரவிச்சந்திரன் விரைவில் ‘மார்க் ஆண்டனி 2’ படத்திற்கான பணிகளை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News