Monday, December 16, 2024

பொங்கலுக்கு ரிலீஸாகும் டாப் மெகா திரைப்படங்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜனவரி மாதத்தில் வரும் பொங்கல் தினத்தில் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம் திரைக்கு வருகிறது. அதேபோல் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படமும் ஜனவரி பத்தாம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் ராம் சரணுடன் கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, அஞ்சலி என பலர் நடித்துள்ளார்கள். அதையடுத்து பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ மற்றும் பாலகிருஷ்ணா நடித்துள்ள ‘தாகு மகாராஜ்’ என நான்கு படங்கள் திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது. அதேசமயம் வீர தீர சூரன் படமும் ஜனவரி மாதம் ரிலீஸ் என தேதி குறிப்பிடாமல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அப்படம் ஜனவரியில் வெளியாகுமா அல்லது தள்ளி போகிறதா என இதற்கு பின்னர் தான் தெரியவரும்.

- Advertisement -

Read more

Local News