Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

புஷ்பா 2-வின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ராம் சரண்-ஐ இயக்குகிறாரா இயக்குனர் சுகுமார்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள “கேம் சேஞ்சர்” படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே. சூர்யா, ஜெயராம், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், அஞ்சலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, “புஷ்பா” மற்றும் “புஷ்பா-2” படங்களை இயக்கிய சுகுமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறாராம் ராம் சரண். கிட்டத்தட்ட இந்த கூட்டணி உறுதியாகிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இதற்கு முன்பு ராம் சரண், சுகுமாரின் இயக்கத்தில் உருவான “ரங்கஸ்தலம்” என்ற வெற்றி படத்தில் நடித்திருந்தார். இப்போது தனது 17-வது படத்தின் மூலம் அவர் மீண்டும் சுகுமாருடன் இரண்டாவது முறையாக இணைவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News