Monday, December 16, 2024

எனது கனவு நிறைவேறியது. எனக்கு வாழ்நாள் வாய்ப்பை தந்த அஜித்திற்கு நன்றி – இயக்குனர் ஆதிக் நெகிழ்ச்சி பதிவு! #GoodBadUgly

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் அஜித் நடிப்பில் இந்தாண்டு எந்த படமும் வெளியாகவில்லை. இது அவரது ரசிகர்களுக்கு நிச்சயம் ஏமாற்றமே என்றாலும் அடுத்தாண்டு அவரின் இரு படங்கள் வெளியாக உள்ளன. அந்தவகையில் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‛விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுஒருபுறம் இருக்க ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‛குட் பேட் அக்லி’ படத்தில் அஜித் நடித்து வந்தார். அவருடன் திரிஷா, பிரசன்னா, சுனில் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் தற்போது முடிவடைந்துள்ளது. மேலும் இந்த படத்திற்காக அஜித் தனது எடையையும் குறைத்து ஸ்லிம்மாக உள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவில், “எனது கனவு நிறைவேறியது. எனக்கு வாழ்நாள் வாய்ப்பை தந்த அஜித்திற்கு நன்றி. லவ் யூ. இது அஜித் சாரின் கடைசி நாள் படப்பிடிப்பு. இதுவொரு அழகான பயணமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.‛குட் பேட் அக்லி’ படத்தை முடித்த கையோடு ‛விடாமுயற்சி’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பில் அஜித் பங்கேற்க உள்ளார்.

- Advertisement -

Read more

Local News