பிரபல கன்னட இயக்குநர் ஹர்ஷா தற்போது பாலிவுட்டில் தனது இயக்குனராகியுள்ள அறிமுகத்தை மேற்கொண்டுள்ளார். இதற்காக அவர் இயக்கும் முதல் படம் பாஹி 4 ஆகும். இந்த படத்தில் டைகர் ஷெராப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்திலிருந்து டைகர் ஷெராப்பின் தோற்றம் வெளியிடப்பட்டு வைரலானது.
இப்படம் வரும் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனை ஒட்டி இயக்குநர் ஹர்ஷா தனது முதல் பாலிவுட் படத்தை இயக்குவதற்கான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,
வட இந்தியாவில் கன்னடப் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணமான திறமையான இயக்குநர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பெரிய படங்கள் மட்டுமல்ல, சிறிய படங்களும் பாராட்டப்படுகின்றன என்பது நம் திரையுலக வளர்ச்சியை காட்டுகிறது. எனக்கு கிடைத்த இந்த புதிய வாய்ப்பிற்காக மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எனக்கு முழுமையான நம்பிக்கை வைத்த டைகர் ஷெராப் போன்ற யூத் ஐகானுடன் இப்படத்தை இயக்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார்.