சூர்யா, திஷா படானி, பாபி தியோல் உள்ளிட்டோர் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘கங்குவா’. இப்படத்தின் தொடக்க அரைமணி நேர காட்சிகள் பலராலும் அறுவையாகவும், மொக்கையாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது. மேலும், சூர்யாவின் மனைவி ஜோதிகாவும் ரசிகர்களின் கருத்துகளை ஒப்புக்கொண்டு, தொடக்க காட்சிகள் சரியாக அமையவில்லை என்றும், ஒலி மிகவும் இரைச்சலாக இருந்தது என்றும் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விமர்சனங்களுக்கு பதிலாக, படக்குழு தொடக்கத்தில் அரைமணி நேர காட்சிகளில் 12 நிமிடங்களை குறைத்து, ஒலியின் இரைச்சல் அளவையும் சீரமைத்துள்ளது.
மூன்றாவது வாரத்தில் பெரிய படங்கள் திரையிடப்படமாட்டாது என்பதால், ‘கங்குவா’வுக்கு மேல் ஆதரவு கிடைக்க செய்ய இந்த மாற்றங்கள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதேசமயம், திங்கள் கிழமையன்று ரசிகர்களின் வருகை சற்று குறைவாக இருந்ததாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.