Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

மூன்றாவது வாரத்தில் முந்நூறு கோடியை நோக்கி வெற்றி நடைப்போடும் அமரன் திரைப்படம்! #Amaran

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் தீபாவளி முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான படம் ‘அமரன்’. இப்படம் தனது வெளியீட்டின் பின்னர் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பல புதிய சாதனைகளைப் படைத்துள்ளது. நவம்பர் 9 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக, இப்படம் 200 கோடி வசூலைக் கடந்துள்ளது என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சூர்யாவின் ‘கங்குவா’ படம் வெளியான பிறகும், ‘அமரன்’ படத்திற்கான தியேட்டர் வரவேற்பு குறையவில்லை. மூன்றாவது வாரத்தில் துவங்கி இருக்கும் இப்படம் வார இறுதியில் 300 கோடி வசூல் அடைந்தாலும் அதில் ஆச்சரியம் இல்லை என்பதே பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களின் லேட்டஸ்ட் அப்டேட்.

275 கோடி வரை தற்போது இப்படம் வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது. இன்றும் நாளையும் விடுமுறை தினமாக இருப்பதால், இரண்டு நாட்களிலும் அதிக வரவேற்பு மற்றும் வசூல் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஆன்லைன் முன்பதிவும் மிகுந்த விரைவில் நடைபெற்று வருவதையும் பார்க்க முடிகிறது. இன்னும் ஓரிரு நாட்களில், ‘அமரன்’ 300 கோடி வசூல் அடைந்தது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

- Advertisement -

Read more

Local News